» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவூதி அரேபியாவில் 3 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 11:58:52 AM (IST)

சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றுவது மூன்று வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவூதி அரசின் செய்திப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில், சோமாலியா நாட்டைச் சேர்ந்த நான்கு பேரும், எத்தியோபியாவைச் சேர்ந்த ஒருவரும், சவூதிக்குள் போதைக் பொருள் கடத்தி வந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்து. ஒரு சவூதியைச் சேர்ந்த நபருக்கு, அவரது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆணடு தொடங்கியது முதல், சவூதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது. இவர்களில் சுமார் 150 பேர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். கடந்த ஆண்டு மட்டும் சவூதியில் 338 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை தோற்கடிக்கும் வகையில் இந்த ஆண்டு மரண தண்டனை அதிக வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சவூதி அரேபியாவில் தற்போது, போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம் மீண்டும் தொடங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory