» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:25:35 AM (IST)



அமெரிக்​கா​வில் கோயிலுக்கு செல்லும் வழியில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் கார் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. 

அமெரிக்​கா​வில் நியூயார்க்கில் வசிக்கும் இந்​தி​யர்​களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் கடந்த வாரம் மேற்கு வர்​ஜினி​யா​வின் மார்​ஷல் மாவட்​டத்​தில் உள்ள பிரபுப​டாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்​துள்​ளனர். 

இந்​நிலை​யில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என குடும்​பத்​தினர் காவல் துறை​யில் புகார் செய்​துள்​ளனர். ஓஹியோ மாவட்ட போலீ​சார் விசா​ரணை நடத்​தியதில், பிக் வீலிங் கிரீக் சாலை​யில் அவர்​கள் சென்ற கார் விபத்​தில் சிக்கி இருந்​தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிய​வந்​தது. அங்​கிருந்து அந்த 4 பேரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டன. இந்த தகவலை மார்​ஷல் மாவட்ட அதி​காரி மைக் டவு​கெர்டி தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து போலீ​சார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory