» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒரு கணம் கூட விவாகரத்துப் பற்றி சிந்தித்ததே கிடையாது: மிச்சல் ஒபாமா விளக்கம்!
வியாழன் 17, ஜூலை 2025 3:28:56 PM (IST)
"என் வாழ்நாளில், ஒரு கணம்கூட, விவாகரத்துப் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது" என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா கூறினார்.

அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும் சாதாரண பேச்சு வழக்கில், தங்களுக்கு இடையே விவாகரத்து என்பது வெறும் புரளிதான், நாங்கள் நீடித்த, மிகவும் அன்பான வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மிச்சல், இவர் எனது கணவர் என்று அன்போடு கூறினார். அப்போது, மிச்சலின் சகோதரர் கிரெய்க், இருவரையும் ஆரத் தழுவினார். உங்கள் இருவரையும் ஒரே அறையில் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என கிரெய்க் கூற, அதற்கு சிரித்தபடி, மிச்சல், ஆமாம், எனக்குத் தெரியும். நாங்கள் விவாகரத்துப் பெறாவிட்டாலும், பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் என்றார்.
முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கு மற்றும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் மிச்சல் பங்கேற்காத நிலையில், விவாகரத்து புரளி எழுந்திருப்பது குறித்து மௌனம் கலைத்த ஒபாமா, இது பற்றி வெளியில் பேச்சு இருப்பது எனக்கு முதலில் தெரியாது. இது தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போதும் தெரியாமலே இருந்துள்ளது. பிறகு ஒருவர் என்னிடம் இதுபற்றி கேட்டபோதுதான், எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்றேன்? என்கிறார்.
அந்தச் சம்பவம் பற்றி விவரித்த கிரெய்க், விமான நிலையம் ஒன்றில், தனி நபர் ஒருவர், ஒபாமாவை பார்த்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்டுள்ளார். அப்போதுதான் இந்த விவகாரம் ஒபாமாவுக்குத் தெரிந்துள்ளது.
அடுத்து பேசிய மிச்சல் ஒபாமா, என் வாழ்நாளில், ஒரு கணம்கூட, விவாகரத்துப் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது. எவ்வாறு என்னுடைய கணவரை விட்டுப் பிரிவதைப் பற்றி நினைப்பேன். நாங்கள் இருவரும் மிகவும் கடினமான நேரத்திலும் ஒன்றாக இருந்திருக்கிறோம். மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்திருக்கிறார். நான் திருமணம் செய்துகொண்ட நபரால்தான், நான் சிறந்த மனிதராக மாறியிருக்கிறேன் என்றும் மிச்சல் கூறியிருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
