» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)
இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசியை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.
 இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. "நிமிஷா பிரியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட அரசு முயல்கிறது.
 இதற்காக இந்திய அதிகாரிகள், உள்ளூர் சிறை அதிகாரிகள், வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பில் உள்ளனர். இது மரண தண்டனை ஒத்திவைக்கப்படுவதை சாத்தியமாக்கி உள்ளது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஷரியா என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் குருதிப் பணம் என்பது ஒரு வகையான நீதியாக கருதப்படுகிறது. எனவே, பிரியா குடும்பத்தினர் சார்பில் உயிரிழந்த மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்வந்தனர். அதை மெஹ்தி குடும்பத்தினர் ஏற்றார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)


.gif)