» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் தேசத்தின் தற்காப்பு ரீதியான நடவடிக்கையை சார்ந்தது. அதன் நோக்கம் அமைதியை நோக்கியது என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார். 
 
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லையோர இந்திய மாநிலங்கள் குறிவைக்கப்பட்டன. அந்த தாக்குதலை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.இந்நிலையில், இந்த மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சனிக்கிழமை அன்று மாணவர்களுடன் இஸ்லாமாபாத் நகரில் உரையாடினார். அப்போது, இந்தியா உடனான நான்கு நாள் நீடித்த அண்மைய மோதலை அவர் நினைவுகூர்ந்தார்.
 "நமது அணுசக்தி திட்டம் முற்றிலும் தேசத்தின் தற்காப்பு ரீதியான நடவடிக்கையை சார்ந்தது. அதன் நோக்கம் அமைதியை நோக்கியது. தாக்குதல் நடத்த அல்ல.  இந்தியா உடனான மோதலில் 55 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுத்தோம்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
 இந்தியாவும் அணுசக்தி பலம் படைத்த நாடு என்பதால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் உலக நாடுகளை வருந்தச் செய்தது. இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தன. போரை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)


.gif)