» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)
டாலருக்கு சவால் காட்ட முயலும் பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேஸிலில் நடந்தது. பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நிறுவன நாடுகள் முதன்மை உறுப்பினர்களாக இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவை இணைந்துள்ளன.
மொத்த உலகளாவிய உற்பத்தியில் 39 சதவிகிதத்தை கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் இணைந்து டாலருக்குப் போட்டியாக பிரிக்ஸ் கரன்சியை வெளியிடுவது பற்றி 2023 ஆம் ஆண்டில் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவான நாடுகள் விரைவில் 10 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ளப் போவதாகவும், அமெரிக்க டாலரைக் காயப்படுத்தவே, பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், "டாலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பிரிக்ஸ் நாடுகள் (இந்தியாவும்) 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். டாலர்தான் அனைவருக்கும் ராஜா. டாலருக்கென்று ஒரு தரமிருக்கிறது.
அவர்கள் என்னிடம் விளையாட்டு காட்டுகிறார்கள். எனக்கும் விளையாட்டு காட்டத் தெரியும். டாலருக்கு சவால் காட்ட பிரிக்ஸ் நாடுகள் முயன்று வருகின்றனர். இதனால், அவர்கள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் அந்த விலை கொடுக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பிரிந்துவிட்டன. அதில், ஒன்று இரண்டு மட்டும் கூட்டாக சுற்றிக் கொண்டிருக்கின்றன” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனடா பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு; தாக்குதல் நடத்தியர் தற்கொலை!
புதன் 11, பிப்ரவரி 2026 12:25:22 PM (IST)

எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:34:38 AM (IST)

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள்: பாவங்களின் தீவில் நடந்தது என்ன?
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:37:23 AM (IST)

இந்தியாவை உலகோடு இணைக்கும் மொழி தமிழ்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:18:37 AM (IST)

இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி - 169பேர் காயம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:27:24 PM (IST)

டிரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு !
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:09:39 PM (IST)

