» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு தரும் டெலிகிராம் சி.இ.ஓ.,!
சனி 21, ஜூன் 2025 11:43:04 AM (IST)

தனது விந்தணு தானத்தின் மூலம் பிற்நத 100 குழந்தைகளுக்கு தனது சொத்துக்களை சமமாகப் பிரிப்பதாக டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் அறிவித்துள்ளார். 
 பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்றும் இளமையாக இருக்க அவர் எடுத்துக்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளுக்கு பாவெல் பிரபலமானவர். ரஷிய நாட்டவரான இவர் துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார்.
 இதற்கிடையே தனது விந்தணு தானத்தின் மூலம் உலகம் முழுவதும் 12 நாடுகளில் 100 பேர் பிறந்ததாக பரபரப்பான அறிவிப்பை சில காலம் முன் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தனது சொத்துக்கள் தனது அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிப்பதாக பாவெல் அறிவித்துள்ளார். 
 இதற்காக சமீபத்தில் ஒரு உயில் எழுதியுள்ளதாகவும் பாவெல் கூறினார். பாவெல் வெளிப்படுத்திய விவரங்களின்படி, அவர் திருமணமாகவில்லை என்றாலும், அவர் மூன்று பெண்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.
 இந்த ஆறு பேரைத் தவிர, விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கும் அவர் தந்தையானார். அனைவரும் தனக்கு சமம் என்றும், யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 அதனால்தான் அவர்கள் அனைவருக்கும் தனது சொத்தில் சம பங்கு இருக்கும் என்று பாவெல் கூறினார். தனது வாழ்க்கை சவால்களால் நிறைந்தது என்று கூறும் 40 வயதான பாவெல் தனது உயிலை எழுதியுள்ளார்.
 இருப்பினும், பாவெலின் முழு சொத்தும் ஒரே இரவில் அவரது குழந்தைகளுக்குச் செல்லாது என்றும் வாழ்க்கையில் அவர்கள் பட்டறிவு பெறவேண்டும் என்பதால் உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொத்து குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார். அதாவது அவரது சொத்துக்கள் 2055, ஜூன் 19 அன்று அவரது 106 குழந்தைகளுக்கு பிரிந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
 ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் மற்றும் ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, பாவெல் துரோவின் நிகர சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலர் முதல் 17.1 டாலர் பில்லியன் வரை உள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, இது ஒரு குழந்தைக்கு சுமார் 131 மில்லியன் டாலர் முதல் 161 மில்லியன் டாலர் வரை பரம்பரைச் சொத்தாக மாறும்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)


.gif)