» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை அளிக்கிறது : பிரிட்டன் பிரதமர் வேதனை!
வியாழன் 12, ஜூன் 2025 4:49:39 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 53 பிரிட்டன் நாட்டினர் உள்பட 242 பயணிகள் பயணம் செய்ததை ஏர் இந்தியா நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், விபத்து குறித்து பதிவிட்டுள்ள பிரிட்டன் பிரதமர், ”பிரிட்டனைச் சேர்ந்த பலருடன் இந்தியாவின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல்கள் அளித்து வருகின்றனர். இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)


.gif)