» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு
வியாழன் 12, ஜூன் 2025 10:59:18 AM (IST)

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து சிக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் ஏப்ரல் 2022 இல் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:34:38 AM (IST)

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள்: பாவங்களின் தீவில் நடந்தது என்ன?
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:37:23 AM (IST)

இந்தியாவை உலகோடு இணைக்கும் மொழி தமிழ்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:18:37 AM (IST)

இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி - 169பேர் காயம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:27:24 PM (IST)

டிரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு !
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:09:39 PM (IST)

ஐநா கௌரவப் பட்டியலில் இந்தியா: 2026-க்கான நிதிப்பங்கை முன்கூட்டியே செலுத்தி சாதனை!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:14:49 PM (IST)

