» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!
வியாழன் 5, ஜூன் 2025 10:56:07 AM (IST)
பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்திருந்தார். ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர் தடை விதித்திருந்தார். இந்தத் தடை உத்தரவை ஜோ பைடன் 2021-ஆம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


.gif)
அல்லாJun 5, 2025 - 06:52:11 PM | Posted IP 162.1*****