» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் 19 பேர் பலி: 4வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது!
திங்கள் 2, ஜூன் 2025 4:40:32 PM (IST)

இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் குவாரியில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும், இந்த விபத்தில் ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, குவாரி விபத்தில் மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்க இன்று 4வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து 4 நாட்கள் ஆகும் நிலையில் அந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவில் நிலநடுக்கம்: ஜப்பான், சீனா, அமெரிக்கா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 11:58:40 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப் பெருமிதம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:07:25 PM (IST)

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு!!
திங்கள் 28, ஜூலை 2025 11:42:11 AM (IST)

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சனி 26, ஜூலை 2025 12:53:21 PM (IST)

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு!!
சனி 26, ஜூலை 2025 11:25:01 AM (IST)

இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடி மகிழ்ச்சி
வியாழன் 24, ஜூலை 2025 5:54:31 PM (IST)
