» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, மே 2025 12:19:03 PM (IST)
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது. வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம்ஏற்றுக் கொண்டது.
மேலும், வரி விதிப்பை நிறுத்திவைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்குகளில் உள்ள வாதங்களுக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், நிர்வாகம் ஜூன் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


.gif)