» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் புகுந்த கார் : 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம்!
புதன் 28, மே 2025 11:43:56 AM (IST)

இங்கிலாந்து கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் கார் புகுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர்.
இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ், போலீசார் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
காருக்கு அடியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதனை லிவர்பூல் நகர மெட்ரோ மேயர் ஸ்டீவ் ரோதரம் இன்று கூறினார். சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் 53 வயதுடைய இங்கிலாந்து வெள்ளை இன நபர் ஒருவரை மெர்சிசைடு போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தின்போது, சிலர் கார் ஓட்டுநரை துரத்தி சென்றனர். சிலர் கார் மீது எட்டி உதைத்தனர். எனினும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி பிரதமர் கீர் ஸ்டார்மர், மேயர் ரோதரமிடம் விவரங்களை கேட்டு அறிந்துள்ளார். அதிகாரிகளும் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதன்பின்னர், அந்த பகுதியில் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவில் நிலநடுக்கம்: ஜப்பான், சீனா, அமெரிக்கா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 11:58:40 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப் பெருமிதம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:07:25 PM (IST)

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு!!
திங்கள் 28, ஜூலை 2025 11:42:11 AM (IST)

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சனி 26, ஜூலை 2025 12:53:21 PM (IST)

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு!!
சனி 26, ஜூலை 2025 11:25:01 AM (IST)

இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடி மகிழ்ச்சி
வியாழன் 24, ஜூலை 2025 5:54:31 PM (IST)
