» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்ஸ் அதிபர் முகத்தில் பளார் விட்ட மனைவி? இம்மானுவேல் மாக்ரோன் விளக்கம்
செவ்வாய் 27, மே 2025 10:43:03 AM (IST)

வியட்நாமில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை அவரது மனைவி அறைந்ததாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், மக்ரோன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன். கடந்த 2017ம் ஆண்டு முதலே அதிபராக இருந்து வருகிறார். தீவிர வலதுசாரியான இவர், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே நேற்று முதல் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டானது.
இப்போது மக்ரோன் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் முன்பு அவரது மனைவி அவரை அறைவது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அதாவது அவர் கீழே இறங்க ரெடியாவதற்குள் விமானத்தின் கதவு திறந்துவிட்டது. அப்போது அவரை மனைவி அறைவது போன்ற காட்சிகள் வெளியானது. அதன் பிறகு அவர் அப்படியே சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போல அந்த காட்சிகள் இருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. பலரும் பிரான்ஸ் அதிபர் மாக்ரோனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் அறையப்பட்டதாக எல்லாம் தகவல்கள் பரப்பின. மேலும், அவரது மனைவியை அந்த வீடியோவில் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவர் கோபமாகவே அறைந்ததாகக் கூட சிலர் குறிப்பிட்டனர். இதனால் இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இருவரும் ஜோக் செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷயமாகும் என நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நானும் என் மனைவியும் சும்மா ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் ஜோக் செய்து கொண்டு இருந்தோம். ஆனால், அதை இப்படியெல்லாம் சொல்வார்கள் எனத் துளியும் நினைக்கவில்லை" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவில் நிலநடுக்கம்: ஜப்பான், சீனா, அமெரிக்கா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 11:58:40 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப் பெருமிதம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:07:25 PM (IST)

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு!!
திங்கள் 28, ஜூலை 2025 11:42:11 AM (IST)

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சனி 26, ஜூலை 2025 12:53:21 PM (IST)

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு!!
சனி 26, ஜூலை 2025 11:25:01 AM (IST)

இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடி மகிழ்ச்சி
வியாழன் 24, ஜூலை 2025 5:54:31 PM (IST)
