» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கி கடன் மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது: நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
வெள்ளி 16, மே 2025 12:47:48 PM (IST)
வங்கி கடன் மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். பிறகு, சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது அவரது 10வது ஜாமீன் மனு என்பது குறிப்பிடத்தக்கது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)


.gif)