» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)
போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார். மோதல்கள் மேலும் வலுவடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்தியாவுடனான ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார் என்று உறுதியளித்துள்ளார். இது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
REALமே 10, 2025 - 12:34:18 PM | Posted IP 162.1*****
வந்துட்டான்யா இந்த கட்டப்பஞ்சாயத்து காரன், உலகத்தில் உள்ள எல்லா நாட்டிற்கும் இவனால்தான் பிரச்சினை.
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


.gif)
டேய் டிரம்ப்மே 13, 2025 - 12:59:39 PM | Posted IP 172.7*****