» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அணு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்
ஞாயிறு 4, மே 2025 9:16:36 PM (IST)
இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷிய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். பேட்டியில் பேசிய அவர், இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க எங்களுக்கு ஆர்வம் இல்லை. இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம் என்று கூறினார். முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசியும் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். எல்லைகளில் 130 ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)


.gif)