» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாஸ்கோவில் மே 9 வெற்றி அணிவகுப்பு: பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு

புதன் 9, ஏப்ரல் 2025 5:29:19 PM (IST)

மாஸ்கோவில் மே 9 வெற்றி தினம் அணிவகுப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.

மே 9, 1945 அன்று இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது. ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பிற நட்பு நாடுகளுக்கும் அழைப்புக் கடிதம் பறந்துள்ளது. பிரதமர் மோடி கடைசியாக 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory