» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கும் முறையில் மாற்றம்: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 8:31:01 PM (IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெ ரிக்க தேர்தல் நடைமுறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெ ழுத்திட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பதிவுக்கு குடி யுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சீட்டுகளும் தேர்தல் நாளுக் குள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடி யுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.தேர்தல் நாளுக்குப் பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டி யல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால் மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, நவீன, வளர்ந்த, வளரும் நாடுக ளால் பயன்படுத்தப்படும் அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்பு களை செயல்படுத்த அமெ ரிக்கா தவறிவிட்டது. இந்தியாவும் பிரேசிலும் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோ–மெட்ரிக் தரவுத் தளத்துடன் இணைக்கின் றன. அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரி–மைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது. இந்த உத்தரவு மூலம் தேர்தல் மோசடி முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோபைட னிடம் தோல்வி அடைந்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வாக்கா–ளர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்று வாக்காளர்களுக்கான உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும்,அமெரிக்க குடிமக்களில் 9 சதவிகிதம் பேருக்கு (அதாவது சுமார் 2.13 கோடி பேருக்கு) குடியுரிமை இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)


.gif)