» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்!
சனி 22, மார்ச் 2025 11:00:16 AM (IST)

ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47-வது அதிபர் ஆக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக மெக்சிகோ, கனடா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி அவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியர்கள் பலர் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய மந்திரி கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த பிப்ரவரி மாதம் 333 பேர் நேரடியாக 3 ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வணிக விமானங்கள் மூலம் பனாமா வழியாக 55 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும் 295 இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)


.gif)