» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்புதல் : வெள்ளை மாளிகை அறிவிப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:31:13 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்புடனான பேச்சுவார்த்தையில் ரஷிய தலைவர்கள் ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரால் இரு தரப்பிலும் லட்சக்கணக்கிலான மக்கள் உயிரிழந்து உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் புதிதாக அதிபராக பதவியேற்ற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேசி கொண்டனர். அப்போது, உக்ரைன் போரில் அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவை பற்றி பேசி கொண்டனர்.
நீண்டகால அமைதியுடன் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான தேவை பற்றி தலைவர்கள் இருவரும் பேசி ஒப்பு கொண்டதுடன், அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான தேவை பற்றியும் வலியுறுத்தினர். இதேபோன்று ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேசினார் என லெவிட் கூறியுள்ளார்.
போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்றார். எரிசக்தி உட்கட்டமைப்புகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்படும் என கூறி, அதற்கான உத்தரவை புதின் பிறப்பித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவில் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன. எனினும், ஒரு விரிவான போர்நிறுத்த ஒப்பந்தம் அவசியம் என அமெரிக்கா கூறியதும், இந்த தாக்குதல்களை ரஷியா நிறுத்தியது என சி.என்.என். வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

உண்மMar 20, 2025 - 09:43:40 PM | Posted IP 104.2*****