» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கடுமையான வரி, பொருளாதார தடை விதிக்கப்படும் : ரஷியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
சனி 8, மார்ச் 2025 12:52:27 PM (IST)
உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

ஆனால், போரை நிறுத்தினால் எதிர்காலத்தில் ரஷியாவின் தாக்குதல் இருக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன இருக்கிறது? என ஜெலன்ஸ்கி கேட்டார். இதனால் போரை நிறுத்தும் முடிவில் உக்ரைன் இல்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில், உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. இது சர்ச்சையானது. இந்த சூழலில், உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது ரஷியாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் வெளியிட்டு உள்ளார். உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்களை நடத்தி வருவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு பகுதியாக புதிதாக பொருளாதார தடைகள், அதிக வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், இந்த தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் எச்சரித்து உள்ளார்.
ரஷியாவும், உக்ரைனும் இருவரும் காலதாமதம் ஏற்படுவதற்கு முன், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.
இதுபற்றிய டிரம்ப் பதிவில், போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது என்ற உண்மையின் அடிப்படையில், நான் மிக பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் ரஷியா மீது விதிப்பது என நான் கடுமையாக பரிசீலனை செய்து வருகிறேன்.
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் இருக்கும் என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.
சர்வதேச சட்ட மீறல்கள் அல்லது கடுமையாக நடந்து கொள்வது ஆகியவற்றை தடுத்து நிறுத்துவதற்காக இதுபோன்ற தடைகள் ஒரு நாடால் மற்றொரு நாடு மீது விதிக்கப்படுகிறது. எனினும், ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதுபோன்று தெரியவில்லை.
ஏனெனில், கடந்த ஜனவரியில், ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்கும்போது, இதேபோன்றதொரு கடுமையான எச்சரிக்கையை ரஷியாவுக்கு எதிராக வெளியிட்டார். நான் முன்பே ஜனாதிபதியாக இருந்திருந்தேன் என்றால், இந்த போரே நடைபெற்று இருக்காது என்றும் கூறினார். எனினும், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது முடிவுக்கு வராமல் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)
