» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். வன்முறையில் 25 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய குடியேற்ற மசோதாவை அறிவித்து சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தி வருகிறார். மேலும் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள், பதவிகள், அதிகார சலுகைகள் பறிபோவதாக அந்த நாட்டினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் நேற்று தலைநகர் லண்டனை முற்றுகையிட்டு வெளிநாட்டினர், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. போராட்ட பேரணியில் சுமார் 1½ லட்சம் பேர் திரண்டனர். இதனால் லண்டன் நகரம் குலுங்கியது.
போராட்டக்காரர்கள் தேசிய கொடி ஏந்தி வந்தனர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எதிராக பதாகைகளை கையில் வைத்திருந்தனர். டாமி ராபின்சனுக்கு எதிராக மற்றொரு தரப்பை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர். இருதரப்பினரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி போட்டிப்போட்டு கோஷமிட்டனர்.
அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தடுக்க முயன்ற 26 போலீசார் படுகாயம் அடைந்தனர். இருந்தபோதிலும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிரான பேரணியை ஆதரித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் வீடியோ காலில் அவர் பேசினார். அப்போது அவர், "நீங்கள் வன்முறையை தேர்ந்தெடுக்காவிட்டாலும், அது உங்களை தேடி வருகிறது. எதிர்த்து போராட வேண்டும் அல்லது சாக வேண்டும். கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)


.gif)