» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவுடனான போர் முடிவுக்கு வருகிறது: உக்ரைன் - அமெரிக்கா இடையே கனிமவள ஒப்பந்தம்!
புதன் 26, பிப்ரவரி 2025 9:06:17 PM (IST)

அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டாண்மையை இறுதி செய்வதற்காக கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 3 ஆண்டு–களுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நாளை மறுநாள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஷியாவுடனான போரின் போது உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்–களை வெட்டி எடுக்கும் உரிமை களை தங்களுக்கு கால வரையில்லாமல் அளிக்கப்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா செல்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்கள் ரஷியாவுடனான போர் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டாண்மையை இறுதி செய்வதற்காக கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை பெறுவதற்கும், டிரம்ப் நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்து வதற்கும், நீண்ட கால அமெரிக்க பாதகாப்பு உறுதிபாட்டுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரஷியாவுடனான போர் நிறுத்தத்திற்கு முதல் படியாக அமெரிக்கா கருதுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)
