» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் தங்க அட்டை திட்டம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 26, பிப்ரவரி 2025 12:11:14 PM (IST)
அமெரிக்காவில் குடியுரிமை பெற புலம்பெயர்ந்தோருக்கான புதிய திட்டம் ஒன்றை அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த அறிவிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய தங்க அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இது புதிதாக குடிபெயர்வர்களுக்கு 5 மில்லியன்(சுமார் ரூ.43 கோடி) டாலர்களுக்கு விற்கப்படும் என்றும், இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது "குடியுரிமைக்கான பாதை” என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், "நாங்கள் ஒரு கோல்டு கார்டை விற்பனை செய்யப் போகிறோம்.நாங்கள் அந்த கோல்டு கார்டுக்கு சுமார் 5 மில்லியன் டாலர் விலையை நிர்ணயிப்போம். அது உங்களுக்கு கிரீன் கார்டைவிட அதிக சலுகைகளை வழங்கும்.
இது குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும். இந்த அட்டையை வாங்குவதன் மூலம் பணக்காரர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் நிறைய பணம் செலவழித்து, நிறைய வரிகளைச் செலுத்தி, நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள்” என்றார்.
மேலும் இதுபற்றி லுட்னிக் கூறும்போது, "இது இபி-5 விசாவுக்கு மாற்று ஏற்பாடாக கூட இருக்கலாம். கிரீன் கார்ட்க்கு செலவளிக்கும் தொகை நேரடியாக அரசுக்குச் செல்லும். அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் குடியேறுபவர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்கும்” என்றார். இந்தத் திட்டம் இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)
