» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி: எதிர்க்கட்சி தலைவர் அதிபர் ஆகிறார்
திங்கள் 24, பிப்ரவரி 2025 9:56:04 PM (IST)

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
ஜெர்மனியில் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. தி கிரீன்ஸ், சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்திருந்தது. இதற்கிடையே ஆளும் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுதந்திர ஜனநா யகக் கட்சி வாபஸ் பெற்றது. மேலும் ஓலாப் ஸ்கால்சுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இதனால் முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சி தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜெர்மனியில் நேற்று தேர்தல் நடந்தது. தேர்தலில், ஒலாப் ஸ்கால் சின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சிக ளான கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி, வலதுசாரி கட்சி யான ஏ.எப்.டி, கட்சி ஆகி யவை இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு முடிந்த வுடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதன் முதல் கட்ட முடிவுகள் வெளி யாகின. இதில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்து உள்ளது. அக்கட்சி 16 சதவீத வாக்குகளையே பெற்று உள்ளது. பிரெட்ரிக் மெர்ஸ் தலை மையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி கூட்டணி 28.6 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதன்மூலம் அக்கட்சி ஆட்சி அமைக் கிறது. ஜெர்மனியின் அடுத்த அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூட்டணி அர சாங்கத்தை அமைக்க நட வடிக்கை எடுத்து வருவதாக பிரெட்ரிக் மெர்ஸ் தெரி வித்தார்.
தீவிர வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி. கட்சி 19.9 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுகிறது. ஓலாப் ஸ்கால் சின் சமூக ஜனநாயகக் கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே தேர்தல் தோல்வியை ஓலாப் ஸ்கால்ஸ் ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். எங்கள் கட்சிக்கு கசப்பான தேர்தல் முடிவு என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)
