» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

பிரான்சில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, பிரான்சின் மெர்சிலி நகருக்கு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சென்றார்.
அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, மெர்சிலி நகரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும், மெர்சிலி நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினர். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க அரசின் கல்வித்துறை கலைப்பு: அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!
வெள்ளி 21, மார்ச் 2025 11:15:31 AM (IST)

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: இந்திய வம்சாவளி நபர் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 4:17:52 PM (IST)

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்புதல் : வெள்ளை மாளிகை அறிவிப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:31:13 AM (IST)

ஜோ பைடன் நிர்வாகத்தால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தாமதம் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு
புதன் 19, மார்ச் 2025 5:33:03 PM (IST)

டிராகன் விண்கலம் மூலம் 9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
புதன் 19, மார்ச் 2025 10:09:07 AM (IST)

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 404 பேர் பலி
புதன் 19, மார்ச் 2025 8:38:32 AM (IST)
