» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காலிஸ்தானிய தலைவர் படுகொலையில் இந்தியா தொடர்பு...? ட்ரூடோ குற்றச்சாட்டு
செவ்வாய் 19, செப்டம்பர் 2023 10:07:06 AM (IST)
கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை சம்பவத்தில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.
கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்தி கூறினார். இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்திலும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)
