» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார்: வெள்ளை மாளிகை

சனி 3, ஜூன் 2023 8:08:29 AM (IST)அமெரிக்கா விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். அதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றுகளை வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது, விழா மேடையில் இருந்து அதிபர் ஜோ பைடன் ஓட முயன்றார். அந்த நேரத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனை எதிர்பார்க்காத பாதுகாப்பு வீரர்கள், அதிபரை தூக்கினர். இந்த வீடியோ சமூக தலைதளங்களில் வைரலானது.

இதனிடையே, அதிபர் மாளிகை வெளியிட்ட தகவலில், அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார் என்றும் அவருக்கு எந்த பாதிப்பு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory