» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ.1 கோடி வழங்க நடிகைக்கு உத்தரவு
வியாழன் 6, ஏப்ரல் 2023 10:57:33 AM (IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதூறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்பு குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக,கடந்த 2018-ம் ஆண்டு ட்ரம்ப் மீது ஸ்டார்மி அவதூறு வழக்கு தொடுத்தார். இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரூ.2.4 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்டார்மிக்கு மேலும் ரூ.2 கோடி அபராதம் விதித்தது.இதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 9-வது சர்க்யூட் கோர்ட் அப்பீல்ஸில் ஸ்டார்மி மேல் முறையீடு செய்தார்.இந்த வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஸ்டார்மி மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மேல்முறையீட்டு செலவாக ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது. நடிகை ஸ்டார்மியுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதே நாளில் இந்தத் தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
வியாழன் 26, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி படுகொலை: சொந்தக் குடும்பத்தினரே தீர்த்துக்கட்டினர்?
திங்கள் 23, மார்ச் 2026 12:55:43 PM (IST)

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

