» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலிக்கு தடை: பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் உத்தரவு

புதன் 5, ஏப்ரல் 2023 11:59:14 AM (IST)

அமெரிக்கா, கனடா, பெல்ஜியத்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறுகையில், டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து

reelsApr 6, 2023 - 01:34:34 PM | Posted IP 162.1*****

kooda apdithan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory