» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிரடிப் படை : ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 4, ஏப்ரல் 2023 11:41:53 AM (IST)

இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய அதிரடிப்படை திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்.

இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை மந்திரி சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப் படை அமைக்கும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு. குற்றம் செய்தவர்கள் இனி தப்ப முடியாது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory