» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவிடம் இழந்த நிலங்களை நிச்சயம் மீட்போம் : உக்ரைன் அதிபர் உறுதி!!

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 5:27:49 PM (IST)

ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்பதிலும், நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என  உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசியதாவது: இந்தப் போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம். உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன. கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory