» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் இலவச பொருட்களை வாங்க கூட்ட நெரிசல்: குழந்தைகள் உள்பட 12 பேர் பலி!

சனி 1, ஏப்ரல் 2023 3:30:12 PM (IST)



பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பணவீக்கம், வறுமை, வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தானில் பசியும், பட்டினியாக மக்கள் தவித்து வரும் நிலையில் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் மூச்சு திணறி பெண்கள், குழந்தைகள் என 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமரே காரணம் என குற்றம் சாட்டிய பெண்கள், சமையல் எரிவாயு சிலிண்டர், குடிநீர், மின்சாரம், அரிசி உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் செத்து மடிவதாக கூறினர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory