» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயக்கம்
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:18:53 PM (IST)
ரஷ்யாவை எதிர்க்க நவீன ஆயுதங்கள் வேண்டுமென உக்ரைன் கேட்ட நிலையில் அமெரிக்கா ஆயுதங்கள் தர தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரியில் போரை தொடங்கியது. தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
பொதுமக்கள் பலர் பலியாகியுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு தேவையான பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலினால் உக்ரைனின் பல பகுதிகள் சேதமடைந்தன. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் வ்ளாடிமிர் ஜெலன்ஸ்கி, தங்களுக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்தால் ரஷ்யாவை தடுக்க முடியும் என தெரிவித்திருந்தார். வான்வழி படையில் உக்ரைனிடம் போதிய பாதுகாப்பு இல்லாததால் அமெரிக்காவின் எப்16 போர் விமானம் வேண்டும் என்பதை குறிப்பிட்டே ஜெலன்ஸ்கி அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் எப் 16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவிகளால் ரஷ்யாவுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை முன்னிறுத்தி அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் டொனால்டு ட்ரம்ப் தொடங்கியுள்ளதால், ஜோ பைடன் பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா
செவ்வாய் 28, மார்ச் 2023 12:07:42 PM (IST)

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் நிறுவ ரஷ்யா முடிவு: ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை
திங்கள் 27, மார்ச் 2023 12:38:20 PM (IST)

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்: காந்தி சிலை அவமதிப்பு!
சனி 25, மார்ச் 2023 11:47:49 AM (IST)

ஜனநாயகத்தை மதிக்கிறோம்: ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து!
சனி 25, மார்ச் 2023 10:20:32 AM (IST)

8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து கனடா சீக்கியர் மீண்டும் கின்னஸ் சாதனை!
வெள்ளி 24, மார்ச் 2023 5:32:14 PM (IST)

இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
வெள்ளி 24, மார்ச் 2023 4:26:56 PM (IST)
