» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு: ஜெலன்ஸ்கி வரவேற்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:44:39 PM (IST)
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிப்பதை வரவேற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தியது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை உக்ரைனுக்கு எதிராக 810 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ்வில் உள்ள அரசு கட்டிடங்கள்ரஷ்யாவின் கடும் தாக்குதலை அடுத்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "தனது வெட்கக்கேடான தாக்குதல்களால் ரஷ்யா, உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயல்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகை சோதிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறி இது. எனவேதான், ரஷ்யாவுக்கும், அந்நாட்டுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் விதிக்கப்படும் கடுமையான வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஆதரிப்பது அவசியமாகிறது. இழப்புகளை அவர்கள் உணர வேண்டும். அதுதான் உண்மையிலேயே உறுதியானது.
புதின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு முன்வருபவர்களிடம் இருந்து அவர் ஓடி ஒளிகிறார். போர் நிறுத்தத்துக்கும் தலைவர்கள் மட்டத்திலான சந்திப்புக்கும் மறுக்கும் புடினுக்கு, பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் சரியான பதிலடி" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலகின் பல நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்துள்ளார். குறிப்பாக, பிரேசில் மற்றும் இந்தியப் பொருட்களுக்கு 50%, சுவிட்சர்லாந்துக்கு 39%, கனடாவுக்கு 35% வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால், இந்த நாடுகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% உயர்வு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:43:28 AM (IST)

அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:56:21 AM (IST)

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:07 PM (IST)

நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி வந்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள் : உலக நாடுகள் பாராட்டு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:56:08 AM (IST)

அமெரிக்காவை இனி நம்ப முடியாது! - ஐரோப்பா தனி ராணுவம் அமைக்க ஜெலன்ஸ்கி அழைப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:32:39 PM (IST)

இஸ்ரேல் ஒரு தீய நாடு; மனிதகுலத்திற்கே சாபக்கேடு : பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 12:06:44 PM (IST)

