» செய்திகள் - விளையாட்டு » உலகம்

8 மாதக் குழந்தை உட்பட 5 இந்தியர்கள் கடத்திக் கொலை: அமெரிக்காவில் பயங்கரம்!!

வியாழன் 6, அக்டோபர் 2022 4:33:05 PM (IST)அமெரிக்காவில் 8 மாதக் குழந்தை உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங், 36. இவர், மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இந்தத் தம்பதிக்கு ஆரூஹி தேரி என்ற 8 மாத பெண் குழந்தை இருக்கிறது. ஜஸ்தீப் சிங் வீட்டில் அவர் உறவினர் அமன்தீப் சிங் (39) என்பவரும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்களன்று இவர்கள் 4 பேரையும் மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டிக் கடத்திச் சென்றனர். இவர்களை யார் கடத்தினார்கள்? எதற்காக கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த புதன்கிழமை போலீஸார் இவர்கள் கடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். மேலும் இவர்கள் கடத்தப்பட்ட மறுநாள் போலீஸார் சந்தேகத்துக்குரிய கடத்தல்காரரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் காணாமல் போயிருந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டனர். போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


மக்கள் கருத்து

dfgdfgdfgOct 6, 2022 - 04:57:30 PM | Posted IP 162.1*****

indians are there in backside

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory