» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!

வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது. இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும்.

இந்நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் அதிக அளவு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. குரங்குகளிடம் இருந்து நோய் பரவுகிறது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள் குரங்குகளை கொலை செய்து வருகின்றனர்.

அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ரியோ டீ ஜெனிரோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதே போன்ற சம்பவங்கள் நாட்டின் பிற நகரங்களிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் இதுப்பற்றி கூறுகையில் "இப்போது நாம் பார்க்கும் நோய் பரவல் மனிதர்களிடையே உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் நிச்சயமாக விலங்குகளைத் தாக்கக்கூடாது" என கூறினார். பிரேசிலில் இதுவரை 1,700 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அங்கு இந்த நோய்க்கு ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

dgokdgkAug 11, 2022 - 02:03:44 PM | Posted IP 162.1*****

manusn otu korange

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory