» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நபியை இழிவாகப் பேசிய பெண்ணை பழிவாங்க தற்கொலை படை தாக்குதல் - அல் கொய்தா மிரட்டல்!
புதன் 8, ஜூன் 2022 11:44:24 AM (IST)
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சுக்கு பழிவாங்கும் விதமாக குஜராத், உ.பி., மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று அல் கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்கள் மனங்களில் இப்போது அவரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியுள்ளது. முகமது நபியை அவமதிப்பவர்களைக் கொல்வோம். அதற்காக நாங்களும், எங்களது குழந்தைகளும் தற்கொலைப் படைகளாக மாறுவோம். எங்கள் தாக்குதலில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. வீட்டில் இருந்தாலும் இல்லை ராணுவத்தின் பாதுகாப்பு அரணில் இருந்தாலும் நாங்கள் தாக்குவோம். இந்தப் போரில் அனைத்து முஸ்லிம்களும் பங்கேற்க அழைக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது".
போலீஸ் பாதுகாப்பு: முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் கூறிய நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளைகுடா நாடுகள் பல, தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில், நூபுர் சர்மா அரசு அதிகாரி அல்ல என்பதால், அவரது சர்ச்சை கருத்து மத்திய அரசின் நிர்வாகத்தில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், வளைகுடா நாடுகளுடனான நல்லுறவு தொடரும் எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
இந்தியன்Jun 8, 2022 - 08:21:12 PM | Posted IP 162.1*****
மூடிட்டு இரு, இல்லேனா அமெரிக்க காரன் வேட்டையாடிடுவான்.
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

MakkalJun 9, 2022 - 11:57:32 AM | Posted IP 162.1*****