» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேசத்தில் கன்டெய்னர் டிப்போவில் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு.!
ஞாயிறு 5, ஜூன் 2022 8:08:55 PM (IST)

வங்கதேசத்தில் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் சிட்டகாங் நகருக்கு வெளியே 40 கி.மீ. தொலைவில் கதம்ரசூல் பகுதியில் தனியார் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என இன்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தஎண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். ரசாயன எதிர்வினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் 350 பேர் சிட்டகாங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)


.gif)