» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பெண்ணை முட்டிக் கொன்ற செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சூடான் நாட்டில் வினோதம்!
சனி 28, மே 2022 3:50:56 PM (IST)
தெற்கு சூடானில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளது.
தெற்கு சூடான் நாட்டில் ஆக்ரோஷத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின் என்ற 45 வயது பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதில் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்கில் காவல் துறையினர் அந்த ஆட்டை கைது செய்தனர். மேலும் அந்த ஆட்டிற்கு தெற்கு சூடான் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாயில்லா ஜீவனாக இருந்தாலும், தப்பு தப்புதான் என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட விலங்கின் உரிமையாளர் மீது தான் வழக்கு தொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கோ, உரிமையாளர் நிரபராதி என்றும், இந்த ஆடுதான் கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். தற்போது இந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுள்ளது. ஆட்டின் உரிமையாளருக்கு தண்டனை கிடையாதா என்றால், ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என்று கூறிய கோர்ட்டு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஐந்து பசுமாடுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)


.gif)