» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெண்கள் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும்: தலீபான்கள் அறிவிப்பு

சனி 7, மே 2022 5:23:15 PM (IST)

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பெண்கள் தங்களது உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என தலீபான் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்கள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்களும்  கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். 

ஆனால்,  பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தலீபான்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்களில்  பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.  இது தொடர்பாக தலீபான்கள் அரசின் மந்திரி காலித் ஹனாபி வெளியிட்ட அறிக்கையில், "  எங்களது சகோதரிகள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார் .

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்ட தலீபான்கள், பெண்கள் மேல் நிலைக் கல்வி பயிலவும் தடை விதித்தனர். தலீபான்களின் இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தில், அந்நாட்டை மேலும் அந்நியப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.  பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 


மக்கள் கருத்து

உண்மமே 7, 2022 - 07:28:53 PM | Posted IP 162.1*****

இவங்களுக்கு கோதுமை அனுப்பிவிட்டது மத்திய அரசு செய்த தவறு தான் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory