» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: திருமணத்தை ஒத்தி வைத்தார் நியூசிலாந்து பிரதமர்!

திங்கள் 24, ஜனவரி 2022 4:34:47 PM (IST)

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தன் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

நியூசிலாந்தில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி பொது நிகழ்ச்சிகளில் 100பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் இறுதிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் வெளியிட்டார். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பிரதமர் ஜெசிந்தா, தன் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு முதல் கிளார்க் கேபோர்ட், 45, என்பவருடன் பிரதமர் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

கிளார்க்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வரும் ஜெசிந்தா, 2018ல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இவர்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். தேதி குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளால் தன் திருமணத்தை ஜெசிந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory