» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

செவ்வாய் 30, நவம்பர் 2021 11:02:47 AM (IST)

ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியது. அதே வேளையில் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் கரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் கரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன், ஒமிக்ரான் வைரஸ் திரிபு கவலைக்குரியதே... அதேவேளை இது மக்கள் பீதியடைய தேவையில்லை. முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல், பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் குளிர்காலத்தில் நாம் எவ்வாறு இந்த வைரசுக்கு எதிராக போராட உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory