» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாகத் தலிபான் அரசு அறிவிப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 10:33:45 AM (IST)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 400 பேர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் நேற்று (மார்ச் 16) திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்டதாக ஆப்கான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதலுக்குள்ளான அந்த மருத்துவமனையில் போதைப்பொருள் அடிமைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக ஆப்கான் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலால் மருத்துவமனையின் பிரதான கட்டடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போது அங்கு மீட்புப் பணிகள் மற்றும் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் தரப்பு விளக்கம்: இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறியுள்ளது. இருப்பினும், காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் தரப்புத் தாக்குதல் நடத்தியதை அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் பதற்றம்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில வாரங்களாக எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் மூன்று வாரங்களாகப் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், இந்த வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லையோரப் பகுதிகளில் இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


