» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புதிய வகை கரோனா பரவல் : தென்னாப்பிரிக்கா விமானங்களுக்கு பிரிட்டன் தடை!
வெள்ளி 26, நவம்பர் 2021 5:36:11 PM (IST)
புதிய வகை கரோனா பரவல் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் அனைத்து விமானங்களும் தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
அதிக மாறுதல்களை கொண்டுள்ள புதிய வகை கரோனாவின் பரவலை தடுக்க ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரிட்டனை தொடர்ந்து, ஜெர்மனி, இத்தாலி நாடுகளும் தென்னாப்பிரிக்காவுடனான பயண போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. நாடுகள் மத்தியில் அச்சம் அதிகரித்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான பயண போக்குவரத்திற்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தனியாக திட்டம் தீட்டியுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றித்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகி உறுப்பு நாடுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு, தென்னாப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனியில் இன்று இரவு முதல் அமலுக்குவரும் புதிய பயண கட்டுப்பாடுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் ஆண்டை நாடுகளை பாதிக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜெர்மன் நாட்டு மக்களுக்கு மட்டும் பயண கட்டுப்பாடுகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், தென்னாப்பிரிக்கவிலிருந்து வரும் ஜெர்மன் மக்கள், 14 நாள்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய ஜென்ஸ் ஸ்பான், "இன்னும் அதிகமான சிக்கல்களை புதிய வகை கரோனா உருவாக்குவதே தற்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்" என்றார்.
கடந்த பதினைந்து நாட்களாக, தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா அல்லது ஈஸ்வதினி ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ரோம் தடை விதித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் அனைத்து விமானங்களும் தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இதற்கு தென்னாப்பிரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: தமிழக பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு!
திங்கள் 16, மார்ச் 2026 8:12:24 AM (IST)

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி: பதிலடி கொடுத்த வடகொரியா!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:25:22 AM (IST)

ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 12:45:28 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி: தூதரக ரீதியிலான வெற்றி
வியாழன் 12, மார்ச் 2026 12:40:43 PM (IST)

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க மிரட்டல்: ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டார் கிம்!
வியாழன் 12, மார்ச் 2026 8:35:09 AM (IST)

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

