» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துர்கா பூஜை விழாவின்போது கோயில்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு!

வெள்ளி 15, அக்டோபர் 2021 3:35:24 PM (IST)

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். 

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை யினரை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விளக்கம் அளித்துள்ளார். துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 22 மாவட்டங்களில் துணை ராணுவ படையை குவிக்க ஷேக் ஹசீனா உத்தரவு பிறப்பித்தார்.

தலைநகர் டாக்காவில் உள்ள தகேஸ்வரி தேசிய கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய ஹசீனா, "கொமில்லாவில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரையும் விட்டு விட மாட்டோம். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

தாக்குதல் சம்பவம் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தொழில்நுட்பத்தை வைத்து கண்டிப்பாக கண்காணிக்கப்போம்" என்றார். வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

வன்முறையின்போது அங்கிருந்த துர்கா சிலைகள் உடைக்கப்பட்டு அதன் மீது கல் வீசப்பட்டு இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துர்கா சிலைகளை ஒரு கும்பல் தாக்குவது போன்ற விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "வங்கதேசத்தில் மதக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் உடனடியாக குவிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொள்கிறோம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory