» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அங்கீகாரம்: மத்திய அரசின் பத்ம விருகள் அறிவிப்பு!

ஞாயிறு 25, ஜனவரி 2026 8:43:58 PM (IST)

தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்டோருக்கு 2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாட்டின் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசுவாமி, மருத்துவத் துறை, எஸ்கேஎம் மயிலானந்தன் - சமூகசேவை, காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் - கலை, எச்.வி.ஹண்டே - மருத்துவம், கே.ராமசாமி - அறிவியல் மற்றும் பொறியியல், கே.விஜயகுமார் - குடிமைப் பணிகள், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - கலை, மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன் - கால்நடை மருத்துவம், நீலகிரி ஆர்.கிருஷ்ணன் (மறைவுக்குப் பின்) - கலை, ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் - கலை, சிவசங்கரி - இலக்கியம் மற்றும் கல்வி, திருவாரூர் பக்தவச்சலம் - கலை, வி.காமகோட்டி - அறிவியல் மற்றும் பொறியயல் பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தர்மேந்திரா உள்ளிட்ட 5 பேருக்கு பத்ம விபூஷண்: நடிகர் தர்மேந்திர சிங் தியோல் (மறைவுக்குப் பின்), கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ், கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் (மறைவுக்குப் பின்) பி.நாராயணன் ஆகியோருக்கும், உ.பி.யை சேர்ந்த என்.ராஜம் ஆகிய 5 பேருக்கு பத்ம விருதுகளில் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

13 பேருக்கு பத்ம பூஷன்: இது தவிர 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் களியப்பட்டி ராமசாமி, பழனிசாமி (மருத்துவம்) மற்றும் எஸ்கேஎம் மயிலானந்தன் (சமூக சேவை) ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory