» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள்: பிரதமர் மோடி தகவல்
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:13:44 PM (IST)
மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், அனைத்து வகையான கலாச்சாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இது தொடர்பாக பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது. மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
மேலும், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதன் பெயர் 'மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்'. கடந்த மாதம், மலேசியாவில் 'லால் பாட் சேலை'அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சேலைக்கு நமது வங்காளக் கலாச்சாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு. இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக ஒரு சாதனையை நிகழ்த்தியது, இது மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அங்கீகாரம்: மத்திய அரசின் பத்ம விருகள் அறிவிப்பு!
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:43:58 PM (IST)

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்; விமானங்கள் ரத்து
சனி 24, ஜனவரி 2026 12:04:20 PM (IST)

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

