» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை எதிரொலி : டிஜிட்டல் தங்கம் விற்பனை கிடுகிடு சரிவு!

புதன் 19, நவம்பர் 2025 8:37:56 AM (IST)

கடந்த மாதத்தில் விற்பனையான டிஜிட்டல் தங்கம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதற்கு முந்தைய மாத விற்பனையை காட்டிலும் 61 சதவீதம் குறைந்தது.

தங்கத்தின் மீதான நாட்டு மக்களின் முதலீடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்தாலும் பொருளாதாரத நிச்சயமற்ற சூழலில் நம்பகமான முதலீடாக கருதப்படுவதால் தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் விற்பனை குறைந்தபாடில்லாமல் நீடித்து வருகிறது. விலை உயர்வால் தங்கத்திற்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் தங்கம் விற்கப்பட்டது. 

பல்வேறு முன்னணி பண பரிவர்த்தனை நிறுவனங்கள் தவிர்த்து புற்றீசல் போல பல நிறுவனங்கள் இதற்காக முளைத்து டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் விற்றன. ஒரு மில்லிகிராம் தொடங்கி கிலோ கணக்கில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதற்கான எளிய வழிமுறைகள், விருப்பத்தேர்வுகள் உள்ளதால் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் டிஜிட்டல் தங்கத்தின் விற்பனை ரூ.1,410 கோடியாக இருந்தது.

இதனிடையே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது, வாங்குவது ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர். மேலும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) டிஜிட்டல் தங்கத்திற்கான விற்பனைக்கு உரிய அங்கீகாரம் விதிக்கப்படவில்லை என அறிவித்தது. இதனால் பொதுமக்கள் உஷார் அடைந்தனர். 

அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பனை கிடுகிடுவென சரிந்தது. இதுகுறித்து வெளியான தகவலில் நாட்டின் டிஜிட்டல் தங்கம் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.550 கோடியாக குறைந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தைவிட 61 சதவீதம் குறைவாகும். முறைப்படுத்தாத நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் தங்கம் விற்பனையை சீரமைக்கும் முயற்சிகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory